'நினைவில் நின்றவை' என்ற 'Golden Melodies' நிகழ்ச்சி மஸ்கட்டில் 14-6-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியைத் தமிழில் தொகுத்து வழங்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. என்னுடைய தொகுப்பில் சில;
அந்த நிகழ்ச்சியைத் தமிழில் தொகுத்து வழங்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. என்னுடைய தொகுப்பில் சில;
'...60-களில் தொடங்கி தமிழ்த் திரைப்பட இசை,
தனெக்கென ஒரு பாதையை அமைத்து
தனி அத்தியாயத்தையே படைத்தது எனலாம்.
அது இறக்கை கட்டி , நம்மை இன்ப வானில் மிதக்க வைத்தது;
வேதனைப் படுகையில் அமைதியாய்,
வாழ்க்கைப் பாதையில் வழிகாட்டியாய்,
வசந்தம் வீசும் காதல் அன்பாய்,
தத்துவம் பேசும் சித்தாந்தமாய்
நித்தமும் நம்மோடு இரவின் நித்திரைவந்து
சுகம் தரும், சுகமான கீதங்களாய் ...
ஒலித்தன, ஒலிக்கின்றன,
இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
அத்தகைய திரையிசையை ‘Golden Melodies’
என்ற பேர்சூட்டி ‘பொன்னானப் பாடல்களை’த் தேர்ந்தெடுத்து,
பலதரப்பட்ட பாடகர், பாடகியர், இசையமைப்பாளர்கள்,
கவிஞர்கள் ஆகியோரின் சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்து
இங்கே ‘நினைவில் நின்றவை’ எனும் தலைப்பில் உங்கள்
நெஞ்சங்களில் இசைமழை பொழிந்திட வருகிறார்கள்...'
மஸ்கட் தமிழ்த் தோட்டத்து ரோஜா செல்வி. பிரியதர்ஷனி
மற்றும் பாடகர்கள் ..
திரு. ரமேஷ்
நாராயண், திரு. அன்வரலி, செல்வன். அகிலேஷ்,
திரு. ஸ்ர்பராஸ்
திரு.. ஷெஹ்னில் பாடல்களை வழங்கினர்.
ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய
ராணி பாடலுக்கான என் தொகுப்புரை :
PBS என்று அன்பாய் அழைக்கப்படும் P.B.
ஸ்ரீனிவாஸ்
தமிழ்த் திரை வானில் ஒளிர்ந்து வசந்தமாய் வாழ்ந்து,
சமீபத்தில் நம்மைவிட்டு மறைந்த இசை நட்சத்திரம்.
ஆனால் என்றென்றும் மிளிரும் நட்சத்திரம் !
அவர்
முண்டாசு கட்டிய
முத்தான குரலுக்கு
முதல்வர் !
கறுப்பு வெள்ளைப் படங்களுக்கு
தனது பாடல்களின் இனிமையால்
சிறப்பு வண்ணம் தீட்டிய ஓவியர்- ஆம்
இவர் ஒரு ஓவியர் !
சட்டைப் பைக்குள் எப்போதும்
வண்ணத் தூரிகைகளை சுமப்பவர் !
எண்ணத்துக் கவிதைகளை
எடுத்தெழுத வைத்திருக்கும்
கவிஞர்... ஆம்
இவர் ஒரு கவிஞர்
!
எட்டு மொழிகள் அறிந்த இவர் - கசல்
பாட்டுக்களை தெலுங்கில் எழுதியவர் !
தன் மென்மைக் குரலால் தமிழ்
இதயங்களைக் கட்டிப்போட்ட
பண்பாளார்.. பணிவாளார் !
பிரபல ஹிந்தி நடிகை ரேகாவின் தந்தையான
காதல் மன்னன் ஜெமினிகணேசனுக்காக அதிகப் பாடல்களைப் பாடியவர்.
1962-ஆம் ஆண்டு வெளியானது ‘வீரத்திருமகன்’ படம்.
கட்டிளம் காளையாக நடிகர் ஆனந்தன் மற்றும்
இளவரசியாக சச்சு நடிக்க இருவரும் காதல் வசப் படுகிறார்கள்.
காதலுக்குத்தான் கண்ணில்லையே..
காதல் கனிகிறது...
காட்சி அமைகிறது !
பாடல் மலர்கிறது !
‘வானத்தின் மீதே
பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே
நின்றாலும் ஏழையின் பெருமை உயராது..’
காதலைக்
கூட சமுதாயக் கண்கொண்டு பார்க்கும்
கவியரசரின்
வரிகள் !
1962
ஆம் ஆண்டு...
நான்
பிறப்பதற்கு முன் பிறந்த பாடல்
நம்
அனைவர் நெஞ்சிலும் என்றென்றும்
நிலைத்திருக்கும்
பாடல் !
இதோ
... செல்வி.பிரியதர்ஷனி மற்றும்
திரு. செல்வன். அகிலேஷ் அவர்களின் குரல்களில் உங்களுக்காக
!