அன்னையைப் போற்றுவோம் ! ©
அன்னை !
நீ !
தாய்மைக் காலத்தின்
அந்திச் சாயாத
சூரியன் !
நீ !
தாய்மைக் காலத்தின்
அந்திச் சாயாத
சூரியன் !
முந்தானை அமுதத்தில்
உயிரேற்றினாய் !
உலகம் சீர்போற்ற
உரமேற்றினாய் !
உயிரேற்றினாய் !
உலகம் சீர்போற்ற
உரமேற்றினாய் !
சிசுவாயிருக்கையிலே
செந்தமிழ்ப்
பாலூட்டினாய் !
செந்தமிழ்ப்
பாலூட்டினாய் !
நீ
செவிமடலில்
அறிவுப் பட்டம் தந்த
பல்கலைக் கழகம் !
செவிமடலில்
அறிவுப் பட்டம் தந்த
பல்கலைக் கழகம் !
ஒரு உடலில்
இரண்டு இதயம்
இயங்காதென யார் சொன்னது !
இரண்டு இதயம்
இயங்காதென யார் சொன்னது !
ஓரே உடலில்
இரண்டு உயிர்களை
சுமக்கும் ஒரே ஜீவன் !
இரண்டு உயிர்களை
சுமக்கும் ஒரே ஜீவன் !
தளராத வீரம் உன்னிடம்
தனிமைப்
பிள்ளைப் பேற்றில் !
தனிமைப்
பிள்ளைப் பேற்றில் !
தாயே !
இந்த அன்னையர் தினத்தில்
என் அன்பெலாம்
உன் தியாகத்தின்
முன் தெளிக்கிறேன்...
மலர்களாக அல்ல
மனத்தின் ஈரங்களாக !
இந்த அன்னையர் தினத்தில்
என் அன்பெலாம்
உன் தியாகத்தின்
முன் தெளிக்கிறேன்...
மலர்களாக அல்ல
மனத்தின் ஈரங்களாக !
--