மஸ்கட்.மு.பஷீர் கவிஞர். ஆசிரியர். 'பாலைப் பூக்கள்' கவிதை நூல் வெளியீடு 2012. கலாச்சார & இலக்கிய செயலாளர். மஸ்கட் தமிழ் சங்கம். பொறுப்பாளர், இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகம், ஒமான். தகவல் தொழில் நுட்பத்துறை மேலாளார்,மஸ்கட், ஓமான். என் பயணமும், ஆர்வமும்: தமிழ் இலக்கியம், கவிதை, சிறுகதை,மேடைப் பேச்சு, பட்டிமன்றம்,அரட்டை அரங்கம், ஆய்வரங்கம் தமிழ், தமிழர் வரலாறு, குமரிக் கண்டம் பற்றிய வரலாறு, தொல்லியல் வரலாற்று தேடல்,அவை பற்றிய படைப்புகளை வெளியிட ஆர்வம்.
மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு
மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா
Saturday, September 9, 2017
Saturday, August 19, 2017
‘கோடங்கி’ & ‘நட்சத்திரச் சிதறல்கள்’ கவிதை நூற்கள் அறிமுகம்- மஸ்கட்
வணக்கம் !
என்னுடைய ‘கோடங்கி’ மற்றும் ‘நட்சத்திரச் சிதறல்கள்’ என்ற இரு கவிதை நூற்கள் அறிமுகம் மஸ்கட் அஞ்சப்பர் உணவக அரங்கில் அகஸ்ட் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வெகுசிறப்பாக நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஸுபைர் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் திரு.பத்ரிநாத் மற்றும் மஸ்கட் தமிழ்ச் சங்க முன்னாள் துணைத்தலைவர் திரு. சந்திரமோகன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். திரு.பத்ரிநாத் அவர்கள் நூற்களின் பிரதிகளை வெளியிட்டு மதிப்புரை உரையாற்றினார். திரு. சந்திரமோகன் அவர்கள் நூற்களைப் பெற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
திரு. ராஜாராம், திரு.வெங்கடரமணி, திரு.சிவராஜ்குமார், திருமதி. சுவர்ணா, திருமதி.கோகிலவாணி,
திரு,வாசுதேவன் சார்பாக திருமதி.ஜெயஸ்ரீ, திருமதி.சாவித்ரி, திரு. தேவதாஸ் ஆகியோர்
மதிப்புரையாற்றினர்.
திரு,வாசுதேவன் சார்பாக திருமதி.ஜெயஸ்ரீ, திருமதி.சாவித்ரி, திரு. தேவதாஸ் ஆகியோர்
மதிப்புரையாற்றினர்.
நான் ( நூல் ஆசிரியர் மஸ்கட் மு. பஷீர் ) ஏற்புரை ஆற்றினேன்.
முன்னதாக திரு.சுந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்த, திரு.சபரிக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மஸ்கட் தமிழ்ப் படைப்பாளிகளும், ஆர்வலர்களும் கலந்து நிகழ்வைச் செம்மையுற சிறப்பித்தனர்.
முன்னதாக திரு.சுந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்த, திரு.சபரிக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மஸ்கட் தமிழ்ப் படைப்பாளிகளும், ஆர்வலர்களும் கலந்து நிகழ்வைச் செம்மையுற சிறப்பித்தனர்.
Monday, August 14, 2017
‘கோடங்கி’ மற்றும் ‘நட்சத்திரச் சிதறல்கள்’ என்ற என்னுடைய இரு கவிதை நூற்கள் வெளியீட்டு விழா
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
‘கோடங்கி’ மற்றும் ‘நட்சத்திரச் சிதறல்கள்’ என்ற என்னுடைய இரு கவிதை நூற்கள் வெளியீட்டு விழா சென்ற 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு குமரிமாவட்டம், திருவிதாங்கொடு முஸ்லிம் கலைக்கல்லூரி கலையரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
அரபித்துறைத் தலைவரின் மறைவாழ்த்தோடு தொடங்கிய விழாவில் பேராசிரியர். அஸ்கர் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர். ஹாமீம் முஸ்தபா கவிதைகளினூடே பயணித்து விழாவினைத் தொகுத்து வழங்கினார்,
HKRR கல்லூரி, உத்தம பாளையம். பேராசிரியர். முனைவர் மு. அப்துல் சமது தலைமையேற்று விழாத் தலைமையுரையாற்றினார்,
திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் திருமிகு. பாரதி கிருஷ்ணகுமார்
விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ‘கோடங்கி’ கவிதை நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்கால சமூகத்தின் அவலங்களையும், மானுடத்தின் இன்றைய சூழலையும் பிரதிபலிக்கும் விதமாக எளிமையாகவும், அற்புதமாகவும் கவிதைகள் அமைந்திருப்பதாக அழுத்தமான, நெகிழ்ச்சியான, அற்புதமான உரையாற்றினார்.
HKRR கல்லூரி, உத்தம பாளையம். பேராசிரியர். முனைவர் மு. அப்துல் சமது தலைமையேற்று விழாத் தலைமையுரையாற்றினார்,
திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் திருமிகு. பாரதி கிருஷ்ணகுமார்
விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ‘கோடங்கி’ கவிதை நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்கால சமூகத்தின் அவலங்களையும், மானுடத்தின் இன்றைய சூழலையும் பிரதிபலிக்கும் விதமாக எளிமையாகவும், அற்புதமாகவும் கவிதைகள் அமைந்திருப்பதாக அழுத்தமான, நெகிழ்ச்சியான, அற்புதமான உரையாற்றினார்.
‘நட்சத்திரச் சிதறல்கள்’ கவிதை நூலை நெல்லை வானொலி நிலைய இயக்குனர் முனைவர்.சுந்தர ஆவுடையப்பன் வெளியிட்டு கருத்தாழமிக்க, சுவையான உரையை நிக்ழ்த்தினார்.
‘கோடங்கி’ கவிதைநூலை பத்திரிகையாளர், எழுத்தாளர், திரு, சோழ நாகராஜன் பெற்றுக்கொண்டு சில கவிதைகளை மேற்கோள்காட்டி அருமையான வாழ்த்துரை வழங்கினார்.
தெற்கெல்லை தியாகியும், பத்திரிகையாளருமான திருமிகு. கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்கள் ‘நட்சத்திரச் சிதறல்கள்’ நூலைப் பெற்றுக்கொண்டு யதார்த்த வாழ்வின் நிலைகளை தன்போன்ற வயதொத்தவர்களும் எளிதில் புரியும் வண்ணம் அமைந்திருப்பதாக கவிதைகளை மேற்கோள்காட்டி வாழ்த்துரை வழங்கினார்,
அரசியலின் அப்பழுக்கற்ற மனிதராக இன்றளவும் வாழ்ந்து சிறப்பிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ திரு, முகமது இஸ்மாயில் அவர்கள் இரு நூற்களையும் திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் வெளியிடப் பெற்றுக்கொண்டார்,
என்னுடைய நன்றியுடன் கூடிய ஏற்புரையில் கோடங்கி கவிதைகள் உருவானது பற்றியும், அதன் காட்சியியல் கருவுருவானவிதம் பற்றியும், சமூக அக்கறையுடன் கூடிய கவிதைகளின் தோற்றம் பற்றியும் எடுத்துரைத்து, தன் இலக்கியப் பயணத்தில் துணை நின்றவர்களையும், விழாவில் வந்து சிறப்பித்த இலக்கிய ஆர்வலர்கள், தமிழ்ப் பெரியவர்கள், மாணவ மாணவியர் அனைவருக்கும் நன்றி கூறினேன், கவிக்கோ அவர்கள் இருந்து நடத்தியிருக்கவேண்டிய விழா எனக்கூறி கவிதை நூலை கவிக்கோவுக்கு சமர்ப்பித்து நெகிழ்ந்தேன்.
விழாவுக்கான சிறப்பான ஏற்பாடுகளை முஸ்லிம் கலைக் கல்லூரித் தாளாளர், லயன். Dr. H. முகமது அலி அவர்களின் வழிகாட்டலின்பேரில் கல்லுரியின் முதல்வரும், பேராசிரியர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர், அரங்கம் நிறைந்த விழாவாகவும், நெஞ்சம் நிறைந்த விழாவாகவும் விழா செவ்வனே நடந்தேறியது.
Subscribe to:
Posts (Atom)