பொங்கல் கவியரங்கம். தலைப்பு: பொங்கட்டும் பொங்கல்
நாள்: 14-1-2014 காலை. மஸ்கட் 'ஸ்பைஸி வில்லேஜ்'
தலைமைக் கவிதை. மு. பஷீர்
‘தை’ மகள் பிறந்தாள் -கவி
‘தை’ மகள் பிறந்தாள்
கவி‘தை’ மகள் பிறந்தாள் !
தமிழ்த்தாயின் கவி‘தை’ மகள் பிறந்தாள் !
தத்‘தை’ அழகுடன்
இத் ’தை’ பிறந்தாள் !
முத்’தை’ சிப்பிக்குள்
வித்’தை’யாய் ஒளிர்ப்பித்து
இத் ‘தை’ பிறந்தாள் !
பச்சைக் கதிர் நாற்றில்
பசியரக்கன் அழிந்திடவே
பிச்சை எனும் சொல்லை
கச்சை கட்டி விரட்டிடவே
இத் ‘தை’ பிறந்தாள் !
வரப்புக்கரைத் தொட்டிலிலே
உறங்கும் கைக்குழந்தை
களையெடுக்கும் தாயின்பாட்டு
குழந்தைக்கு தாலாட்டு !
நிலவுக்கே சென்று
நீந்திப்பேர் பெற்றாலும்
உழவுக்கு சேறு நீந்தும்
உழவனுக்கு நிகரேது !
கலைப்பையோட்டி சேறுடைக்கும்
கதிர்வந்தால் சோறுடைக்கும்
கதிரவன்ஒளி சுட்டெரிக்கும்
காணுமிடமெல்லாம் பயிர்விரிக்கும் !
காளைஎருது துணைநிற்கும்
களத்துமேடு நெல்லறைக்கும்
கண்ணின் மணியாய் நெற்
பொன்மணி நிறைக்கும் !
பட்டகட்டமெல்லாம் அனலில்
சுட்ட பூவாய்க்கருகி
சொட்டும் இன்பமாய் வான்
முட்ட உயர்ந்து நிற்கும் !
பொங்கட்டும் பொங்கல்
தமிழ் மொழிபோல்
திக்கெட்டும்
துலங்கட்டும் பொங்கல் !
வெள்ளலையாய் பொங்கட்டும் இன்பம்
தெள்ளமுதாய் பொங்கட்டும்
கொள்ளளவு குறையாத
கடலளவுச் செல்வம்
சந்ததிக்கும் பொங்கட்டும் !
கற்றோர்க்கும் மற்றோர்க்கும்
உற்றார்க்கும் தோழர்க்கும்
உவகையாய் உதவிட ஈகை
உள்மனமும் பொங்கட்டும் !
தீவினை செய்தோர்க்கும்
நல்வினை செய்யுமனம்
தெய்வம் நீ தருகவென இத்
‘தை’நாளில் வேண்டுகிறோம் !
...... தொடர்ந்தது கவிஞர்களின் கவிதைகள்...
திரு. இரா.அமுதக் கண்ணன், திரு. அஹமதுஜமீல், திருமதி. சுவர்ணா சபரிக்குமார், திருமதி. அல்தாஜ் பேகம், திருமதி. விஜயலக்ஷ்மி மகாலிங்கம், திருமதி. திலகவதி ரத்தினகுமார் கவிமழை பொழிந்தனர்.
.. நிறைவுக் கவிதையுடன் இனிதே கவியரங்கம் நிறைவேறியது!
நாள்: 14-1-2014 காலை. மஸ்கட் 'ஸ்பைஸி வில்லேஜ்'
தலைமைக் கவிதை. மு. பஷீர்
‘தை’ மகள் பிறந்தாள் -கவி
‘தை’ மகள் பிறந்தாள்
கவி‘தை’ மகள் பிறந்தாள் !
தமிழ்த்தாயின் கவி‘தை’ மகள் பிறந்தாள் !
தத்‘தை’ அழகுடன்
இத் ’தை’ பிறந்தாள் !
முத்’தை’ சிப்பிக்குள்
வித்’தை’யாய் ஒளிர்ப்பித்து
இத் ‘தை’ பிறந்தாள் !
பச்சைக் கதிர் நாற்றில்
பசியரக்கன் அழிந்திடவே
பிச்சை எனும் சொல்லை
கச்சை கட்டி விரட்டிடவே
இத் ‘தை’ பிறந்தாள் !
வரப்புக்கரைத் தொட்டிலிலே
உறங்கும் கைக்குழந்தை
களையெடுக்கும் தாயின்பாட்டு
குழந்தைக்கு தாலாட்டு !
நிலவுக்கே சென்று
நீந்திப்பேர் பெற்றாலும்
உழவுக்கு சேறு நீந்தும்
உழவனுக்கு நிகரேது !
கலைப்பையோட்டி சேறுடைக்கும்
கதிர்வந்தால் சோறுடைக்கும்
கதிரவன்ஒளி சுட்டெரிக்கும்
காணுமிடமெல்லாம் பயிர்விரிக்கும் !
காளைஎருது துணைநிற்கும்
களத்துமேடு நெல்லறைக்கும்
கண்ணின் மணியாய் நெற்
பொன்மணி நிறைக்கும் !
பட்டகட்டமெல்லாம் அனலில்
சுட்ட பூவாய்க்கருகி
சொட்டும் இன்பமாய் வான்
முட்ட உயர்ந்து நிற்கும் !
பொங்கட்டும் பொங்கல்
தமிழ் மொழிபோல்
திக்கெட்டும்
துலங்கட்டும் பொங்கல் !
வெள்ளலையாய் பொங்கட்டும் இன்பம்
தெள்ளமுதாய் பொங்கட்டும்
கொள்ளளவு குறையாத
கடலளவுச் செல்வம்
சந்ததிக்கும் பொங்கட்டும் !
கற்றோர்க்கும் மற்றோர்க்கும்
உற்றார்க்கும் தோழர்க்கும்
உவகையாய் உதவிட ஈகை
உள்மனமும் பொங்கட்டும் !
தீவினை செய்தோர்க்கும்
நல்வினை செய்யுமனம்
தெய்வம் நீ தருகவென இத்
‘தை’நாளில் வேண்டுகிறோம் !
...... தொடர்ந்தது கவிஞர்களின் கவிதைகள்...
திரு. இரா.அமுதக் கண்ணன், திரு. அஹமதுஜமீல், திருமதி. சுவர்ணா சபரிக்குமார், திருமதி. அல்தாஜ் பேகம், திருமதி. விஜயலக்ஷ்மி மகாலிங்கம், திருமதி. திலகவதி ரத்தினகுமார் கவிமழை பொழிந்தனர்.
.. நிறைவுக் கவிதையுடன் இனிதே கவியரங்கம் நிறைவேறியது!