‘ பொங்கல் விழா’ வில் ‘ பாட்டு மன்றம்’
மாதம் ஒரு சங்ககத்தின்
(MOS) சார்பில் 14-ஆம் தேதி பொங்கலன்று சிறப்பாக நடந்தேறிய ‘ பொங்கல் விழா’ வில் ‘மஸ்கட்
இலக்கிய வட்டம்’ சார்பில் ‘ பாட்டு மன்றம்’ சிறப்பாக நடந்தேறியது.
'மக்கள் மனதை பெரிதும்
கவர்ந்து நிலைத்து நிற்பது... பழைய பாடல்களா ? புதிய பாடல்களா? என்ற தலைப்பில் நடைபெற்றது.
நடுவராக நான் (மு. பஷீர் தான்) அமர்ந்து நடத்திய பாட்டுமன்றத்தில், ‘பழைய பாடல்களே’ என்ற அணியில் திரு. அன்வர் அலியும்,
திருமதி. விஜயலக்ஷ்மி யும் அருமையானப் பாடல்களைப் பாடி வாதாட, ‘புதிய பாடல்களே’ என
திருமதி. சுவர்ணா சபரிக்குமரும், திருமதி. ஜானகி கர்ணனும் ஆணித்தரமான வாதத்துடனும்,
பாடல்களும் பாடி அழகு சேர்த்தனர்.
இறுதியாக நடுவர் தீர்ப்பு
இனிமையும், சுவையும், கருத்தாழமும், சமுதாயப் பார்வையும், குடும்ப உறவுமுறைகளின் உந்தமும்,
இலக்கிய நயமும், அழகு நடையும் காலத்தையும்
கடந்து நிற்பவை புதிய பாடல்களை விடப் பழைய பாடல்களே எனது தனது வாதத்தை பாடல்களையும்
பாடித் தீர்ப்பளித்தேன்.
பொங்கல் விழாவில் கலந்துகொண்ட
அனவரும் சேர்ந்து அழகிய போங்கலை சமைத்து வழங்கினர்.
பலவிதமான விளையாட்டுப் போட்டிகளும், டராகம் சங்கமம் குழிவினரின் இனிமையான மெல்லிசைப்
பாடல்களும் காதுக்கும் கண்ணுக்கும் விருந்தளித்தன.
காலைக் கவியரங்கம் தமிழ்
மணம் பரப்பியது. மதிய உணவு சுவை சேர்த்தது.
தமிழகத்தில் ஒரு பொங்கலைக்
கொண்டாடிய மகிழ்வும், தொலைக்காட்சிப் பொங்கலை விட்டு சுவையான சர்க்கரைப் பொங்கலை சுவைத்து
மகிழ்ந்த உற்சாகமும் இன்னும், என்றென்றும் இனித்துக் கொண்டேயிருக்கும் !
பொங்கலோ பொங்கல் ! பொங்கிற்று
பொங்கல் !
No comments:
Post a Comment