அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு – மு. பஷீர்
பிப்ருவரி 14, 15 16-ஆம் தேதிகளில் கும்பகோணத்தில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றது. இந்த இலக்கிய மாநாட்டில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஒமான் மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியத் தமிழ் அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள், முன்னணித் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் மற்றும் படைப்பாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
‘திருவினுந்திருவாய்’ மற்றும் ‘ரபியுல் வசந்தம்’ என்ற இஸ்லாமியத் தமிழிலக்கிய இசக் குறுந்தகடுகளை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட ஏஆர் ரஹ்மானின் சகோதரி ஏஆர் ரேகனா பெற்றுக்கொண்டார். நான் (மஸ்கட் மு. பஷீர்) வாழ்த்துரை வழங்கினேன். பிரபல எழுத்தாளர், பேச்சாளர், இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
ஆய்வரங்குகள், கவியரங்கம், பட்டிமன்றம், பேச்சரங்கு, இன்னிசையரங்கு, தமிழறிஞர் கெளரவிப்பு, நூல் வெளியீடு, இசைக் குறுந்தகடுகள் வெளியீடு, இசை, இஸ்லாமிய பாரம்பரிய இசை மற்றும் கலைவடிவங்கள், நிகழ்த்துக் கலைகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன. அறிஞர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், இசைமேதைகள் எனப்பலருக்கும் விருதுகள் மற்றும் பணமுடிப்பும் வழங்கி கௌரவித்தனர்.
சாகித்திய அகடமி விருது பெற்ற படைப்பாளர் ஜே.டி. குருஸ், எழுத்தாளர் அ. மார்க்ஸ், சாத்தான்குளம் அப்துல் ஜபார். பாரதி கிருஷ்ணகுமார் உட்பட முக்கிய தமிழ் இலக்கிய படைப்பாளும், நீதியரசர் கே.என். பாஷா, ஏஆர் ரஹ்மானின் சகோதரி ஏஆர் ரேகனா, இசையமைப்பாளார் ஜிப்ரான், தாஜ்னூர், அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது மற்றும் தமிழ் அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர், கவிக்கோ அப்துல்ரஹ்மான் எழுதிய ‘பாலை நிலா’ நூல், ஆய்வுக்கட்டுரை, விழா மலர் உட்படப் பலநூற்களும் வெளியிடப்பட்டன. மாநாட்டில், தமிழகத்தின் முதல் முழுநீள ’சூஃபி இசை நிகழ்ச்சியை’ தாஜ்னூர் பிரம்மாண்டமாக நிகழ்த்தினார்.
இலக்கியத்திலும், இசையிலும் இதயங் குளிர்ந்த மிகச் சிறந்த விழாவாக மூன்று நாள் நிகழ்வும் மனதுக்கு நிறைவானதாக அமைந்தது. தலைவர். கவிக்கோ அப்துல்ரகுமான், நெறியாளார். கேப்டன் அமீர் அலி, செயலாளர்.அப்துல்சமது, பொருளாளர். ஷாஜஹான் மற்றும் கிஸ்வா நிர்வாகத்தினர் சிறம்பட ஆற்றிய பணிகள் மிகப் பாராட்டத்தக்கவை!
பிப்ருவரி 14, 15 16-ஆம் தேதிகளில் கும்பகோணத்தில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றது. இந்த இலக்கிய மாநாட்டில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஒமான் மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியத் தமிழ் அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள், முன்னணித் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் மற்றும் படைப்பாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
‘திருவினுந்திருவாய்’ மற்றும் ‘ரபியுல் வசந்தம்’ என்ற இஸ்லாமியத் தமிழிலக்கிய இசக் குறுந்தகடுகளை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட ஏஆர் ரஹ்மானின் சகோதரி ஏஆர் ரேகனா பெற்றுக்கொண்டார். நான் (மஸ்கட் மு. பஷீர்) வாழ்த்துரை வழங்கினேன். பிரபல எழுத்தாளர், பேச்சாளர், இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
சாகித்திய அகடமி விருது பெற்ற படைப்பாளர் ஜே.டி. குருஸ், எழுத்தாளர் அ. மார்க்ஸ், சாத்தான்குளம் அப்துல் ஜபார். பாரதி கிருஷ்ணகுமார் உட்பட முக்கிய தமிழ் இலக்கிய படைப்பாளும், நீதியரசர் கே.என். பாஷா, ஏஆர் ரஹ்மானின் சகோதரி ஏஆர் ரேகனா, இசையமைப்பாளார் ஜிப்ரான், தாஜ்னூர், அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது மற்றும் தமிழ் அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர், கவிக்கோ அப்துல்ரஹ்மான் எழுதிய ‘பாலை நிலா’ நூல், ஆய்வுக்கட்டுரை, விழா மலர் உட்படப் பலநூற்களும் வெளியிடப்பட்டன. மாநாட்டில், தமிழகத்தின் முதல் முழுநீள ’சூஃபி இசை நிகழ்ச்சியை’ தாஜ்னூர் பிரம்மாண்டமாக நிகழ்த்தினார்.
இலக்கியத்திலும், இசையிலும் இதயங் குளிர்ந்த மிகச் சிறந்த விழாவாக மூன்று நாள் நிகழ்வும் மனதுக்கு நிறைவானதாக அமைந்தது. தலைவர். கவிக்கோ அப்துல்ரகுமான், நெறியாளார். கேப்டன் அமீர் அலி, செயலாளர்.அப்துல்சமது, பொருளாளர். ஷாஜஹான் மற்றும் கிஸ்வா நிர்வாகத்தினர் சிறம்பட ஆற்றிய பணிகள் மிகப் பாராட்டத்தக்கவை!
No comments:
Post a Comment