செய்திகள் - விளையாட்டு » சிறப்பு
பார்வை
மஸ்கட்டில் 700 தமிழ்க் குழந்தைகள் படிக்க வைக்கும் தமிழ்ச்
சங்கம்
வியாழன் 20, மார்ச் 2014 1:18:16 PM (IST)
அப்போது அவர் கூறியதாவது;
நமது
குமரிமாவட்டம் தமிழுக்கும் இலக்கியத்துக்கும் தொன்றுதொட்ட
பாரம்பரியமும் பண்பாடும் விளையும் பூமியாகும்.
முதலில் இந்தமண்ணில் பிறந்ததற்காக மனதாரப் பெருமைப்பட்டுக் கொள்கிறேன். எண்ணற்ற தமிழ்ப் பங்களிப்புக்களை இந்த மண்ணில் நமக்குத் தந்துவிட்டுச் சென்ற நம் முன்னோர்கள், தமிழ்ப் பெரியவர்கள் சுவாசித்து விடும்
காற்றை சுவாசிக்கும் பாக்கியம் பெற்றதால்தானோ
என்னமோ நானும் இலக்கியப் பணியாற்றும் வாய்ப்பினை பெற்றதுகண்டு மெத்தமகிழ்ச்சி அடைகிறேன்.
பாலைப் பூக்கள் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு. கடந்த பலஆண்டுகளில் என் அனுபவித்தில் விளைந்த கவிதைகள். சமுதாயப்
பின்புலத்தில் உருவாகும் எந்த படைப்பும் மக்களைச்
சென்றடையும் என்பதற்கு சான்றாக என் இந்தக் கவிதைத்தொகுதியும்
அமைந்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்.
கவிக்கோ இந்தநூலை நாகர்கோவிலில் வெளியிட முனைவர். இறையன்பு பெற்றுக்கொண்டு மதிப்புரையும் வழங்கினார். கவிக்கோ அவர்கள் அதில் இடம்பெற்ற காகம், கவிதை பற்றிப் பேசிய கருத்தாளமிக்கப் பேச்சு
இன்றும் நம் காதுகளில் ரீங்காரம் செய்வதாக விழாவில் பங்கேற்ற பலர் என்னிடம் இன்றும் நினைவுபடுத்திப் பேசுவது என் நெஞ்சுக்கு நிறைவாக இருக்கிறது. காற்று, மரங்கள், காந்தி எனப் பலக் கவிதைகளைச் சுட்டிக்காட்டி இறையன்பு தந்த சிறப்புமிக்க மதிப்புரை மிகச்சிறந்த உத்வேகத்தை எனக்கு தந்தது என்றால் அது மிகையாகாது.
என்னுடைய இன்னும் இரண்டு படைப்புக்களை விரைவில் எதிர்பார்க்கலாம். ஒன்று கவிதைத்தொகுப்பு மற்றொன்று கட்டுரைத் தொகுப்பு. வளைகுடாவில் வாழும் மக்களின் வாழ்க்கைச் சூழ்நிலைகைகள், பணம் கொழிக்கும் பாலையில் வாழும் மக்களின்
மனம் சந்திக்கும் மனநிலையையும் அவர்களைச் சார்ந்து வாழும் இங்குள்ளவர்களின் வாழ்வியல் கூறுகள் போன்றவற்றை ஒரு மனவியல் கண்ணோட்டத்தில் கட்டுரையாக வடிக்கத் தொடங்கியிருக்கிறேன். மற்றொன்று சமுதாயச் சூழல் சார்ந்த கவிதைத் தொகுப்பு.
பேச்சும் எழுத்தும்தான் தமிழ்ப்பணி. பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், சுழலும் சொல்லரங்கம், அரட்டை அரங்கம் எனப் பலமேடைகளை வெளிநாடுகளில் வளைகுடாவில்
செய்திருப்பதோடு தமிழ்நாட்டிலும் சிறப்பாகச் செய்துள்ளேன். வளைகுடாவில் பலநாடுகளில் வாழ்ந்த நான் தற்போது ஒமான் நாட்டில் மஸ்கட்டில் வாழ்ந்து வருகிறேன். தற்போது மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின்
பொதுச்செயலராகப் பணியாற்றி வருகிறேன்.
மஸ்கட்டில் 700 தமிழ்க் குழந்தைகள் படிக்கின்ற தமிழ் வகுப்புக்களை, தமிழ்ச்சங்கம் சிறப்பாக நடத்தி வருகிறது.
அதனைப் பொறுப்பேற்று நடத்தி வருவது மிகவும் மேன்மையானப் பணியாக
வாழ்வில் கருதுகிறேன். சென்னை,
தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் நடைபெறும் இப்பள்ளி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலிருந்து சிறந்த இலக்கியவாதிகள், படைப்பாளிகள், கலைஞர்களை அழைத்து மஸ்கட் தமிழர்களுக்காகப்
பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். கலைத்துறைக்காக
தன்னிகரற்ற சாதனைகள் செய்த தமிழகக் கலைஞர்களை அழைத்து அவர்களுக்கு வாழ்நாள் சாதையாளர் விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறோம்.
எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் அந்த வரிசையில் சென்ற ஆண்டுகளில் விருது பெற்றவர்கள் ஆவார்கள். அதைத்
தவிர தமிழர்களுக்கு தேவையான உதவிகளை அந்த நாட்டின்
சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முடிந்தவரை
செய்துவருகிறோம். இவ்வாறு கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment