தெளிந்த சிந்தனை
வடிவம், கல்விப்பணியில் கடந்து வந்த பாதை, சமுதாயப் பயணத்தில் அவரின் அனுபவம், சமுதாயத்தின்
மீதும், தமிழர்கள் மற்றும் தமிழ் மொழிமேல் கொண்ட ஆழ்ந்த பற்று, சிந்தனை மற்றும் அக்கறை
என அவர் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை அப்படியே அள்ளிப்பருகி அமுதுண்ட மகிழ்ச்சி மனத்திலும்,
இதயத்திலும் நீங்காத நினைவலைகளின் எழுச்சி!.
என்னுடைய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூலைப் பெற்று இருதினங்களிலேயே
அதனை மொத்தமும் ஆழ்ந்து படித்து, அதற்கொரு அழகுப் பின்னுட்டமும் தந்து, அதை ‘விடுதலை’
இதழிலேயே பதித்து வெளியிட்டு என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். எத்தனையோ பணிகளுக்கிடையிலும்
ஒரு புதுக்கவிஞனை – அதவும் என்போன்ற ஒரு புதிய கவிஞனை கவிஞனைத் தன் தூரிகையால் விமரிசித்து,
வாழ்த்தி, மனதாரப் பாராட்டும் அவரின் இதுபோன்ற பண்புதான் அவரை தமிழர்களின் இதய சிம்மாசனத்தில்
இன்னும் அரசாட்சி செய்ய வைத்திருக்கிறது….வைத்துக் கொண்டிருக்கிறது என் எண்ணுகிறேன்!.
அவரின் தமிழ்ப்பணியும்,
தொண்டும், கல்விப் பணியும் தொடர வேண்டும், மேன்மேலும் பணிசிறக்கவும் வெற்றிபெறவும்
வேண்டும்..அவர் மூலம் தமிழும் தமிழ்ச்சமுதாயமும் ஒளிரவேண்டும்!!
அன்பன்
மஸ்கட். மு. பஷீர்.
No comments:
Post a Comment