‘அகம் நிறைந்த அமீரகப் பயணம்’ - பாலைப் பூக்களின் அறிமுகமும், பின்னூட்ட நிகழ்வுகளும்
‘ஈத் பெருநாள்’
விடுமுறையில் துபாய் சென்றிருந்தபோது, துபாய் வானலை வளர்தமிழ் மற்றும் தமிழ்த்தேர்
குடும்ப உறுப்பினர்கள் ஒரு சங்கம நிகழ்ச்சியை ‘துபாய் சிவஸ்டார் பவனில்’ ஏற்பாடு செய்திருந்தனர்.
எனது ‘பாலைப்
பூக்கள்’ புத்தகத்தினை அறிமுகம் செய்யும் நிகழ்வாக அமைந்திருந்த நிகழ்வில் வானலை வளர்தமிழ்
- தமிழ்த் தேர் - அமைப்பின்
தலைவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் கலந்துகொண்டு கவிஞர் பஷீர் அவர்களுக்கு வரவேற்பு தந்தார். அமைப்பின் ஆலோசகர் கவிஞர்
காவிரிமைந்தன் தமிழ்த்தேர் பதிப்பாசிரியர் கவிஞர்.ஜியாவுதீன், ஊடகவியலாளர் முதுவை.ஹிதாயத்துல்லா, கவிஞர்.தஞ்சாவூரன்,
கவிஞர்
ஆதிபழனி, கவிஞர் ஜெயராமன் ஆனந்தி, கவிதாயினி நர்கீஸ் பானு கவிதாயினி ஜெயா பழனி, செல்வி ஆனிஷா ஆகியோருடன் முக்கிய விருந்தினராக ‘காப்பியக்கோ’ கவிஞர்
ஜின்னா ஷரிபுத்தீன் ஆகியோரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கவிஞர் ஜின்னா ஷர்புதீன் தமிழ்தேர் சார்பில்
பொன்னாடை அணிவித்தார். நினைவுப் பரிசினை தமிழ்த்தேர் தலைவர்
கோவிந்தராஜ் வழங்கி வாழ்த்துரையாற்றினார்.
என்னுடைய “பாலைப்பூக்கள்” நூலும் காப்பியக்கோ ஜின்னா
ஷர்புதீன் எழுதிய “எல்லாளன் காவியம்’ நூலும் அறிமுகப் படுத்தப் பட்டன. நூல்களைப்பற்றி நூலாசிரியர்கள்
சிறப்புரையாற்றினர்.
கவிஞர் ஜியாவுதீன் தனது நன்றியுரையாற்றினார்.
அன்று மாலை காப்பியக்
கவிஞர் ஜின்னா ஷர்புதீன் அவர்கள் இல்லத்தில் தமிழ்ப்படைப்பாளிகள் சந்திப்பு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் என் இளமைக்கால நண்பர் பத்திரிக்கை புகைப்பட
நிபுணர் குளச்சல் இப்ராகிம் அவர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
‘பாலைப் பூக்கள்’ நூல் பின்னூட்ட நிகழ்வு’ –
அஜ்மான் அமீரகத்தில்...!
ஜூலை 31-ஆம் தேதி இரவு ‘அஜ்மான் சிவஸ்டார்
அரங்கில்’ வைத்து ‘பாலைப் பூக்கள்’ நூல்
பின்னூட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரு.ஹசன் அஹமது அவர்கள் தலைமையில்,
செல்வி ஆனிஷா மற்றும் செல்வன்.பசிம்
பஷீர் ஆகியோரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
கவிஞர்.காவிரிமைந்தன், கவிஞர். திண்டுக்கல் ஜமால், கவிதாயினி
நர்கீஸ்பானு ஆகியோர் ‘பாலைப் பூக்கள்’ நூலுக்கு பின்னூட்டம் வழங்கிப் பேசினர்.
நான் நிறைவாக நூல் ஏற்புரை வழங்கினேன்.
‘தமிழ்த்தேர்’ பதிப்பாசிரியர்.கவிஞர். ஜியாவுதீன்
வரவேற்புரை வழங்க, ஊடகவியலாளர் முதுவை. ஹிதாயத்துல்லா முன்னிலை வகித்தார். செல்வன்.பசிம் பஷீருக்கு நன்றியுரை வழங்க
வாய்ப்பளித்து சிறப்பித்தனர்.
மனதுக்கும்
நெஞ்சுக்கு நிறைவான இலக்கிய சுற்றுலாவாக இந்தப்பயணம் அமைந்தது. தமிழ்
உறவுதான் உறவுகளில் எல்லாம் சிறந்தது என்பதற்கு இந்தப்பயணம் ஒரு சான்று என்றால்
அதுமிகையாகாது.
அன்பின்
நினைவுகளுடன்,
மஸ்கட்
மு.பஷீர் மற்றும்
குடும்பத்தினர்கள்.
No comments:
Post a Comment