மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு

மஸ்கட்டில் ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீடு
மஸ்கட்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் ‘தேனிசைத் தென்றல்’ திரு. தேவா அவர்களால் வெளியிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி, ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் புத்தகத்தை வெளியிட பிரபல திரைப்பட நடிகை கலைமாமணி குமாரி. சச்சு அவர்கள் புத்தகப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆசிரியர் மஸ்கட். மு.பஷீர் அவர்கள் மஸ்கட் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளராகவும், இலக்கியச் செயலாளராகவும் செயல்பட்டவர்.

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா

மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் சென்ற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை முனைவர். வெ. இறையன்பு IAS அவர்கள் பெற்றுக் கொண்டார். ஆழமான சமுதாயக் கருத்துக்ககளையும், இலக்கியச் செறிவையும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் எனப் பாராட்டினார். கவிதைப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சுணக்கம் பஷீரின் இந்தப் புத்தகம் மூலம் நீங்க, இது ஒரு தொடக்கமாக அமையட்டும் எனப் பாராட்டினார். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பாலைப் பூக்கள் தொகுப்பில் பல்வேறு கவிதைகள் சிறந்த கவிதைத் தரம் மிக்கக் கவிதைகள் எனப் பாராட்டினார். ஒருசில கவிதைவரிகளை மேற்கோள் காட்டி அதன் கவிதைச் செறிவினை எடுத்து விளக்கினார். ‘காகம்’ பற்றிய கவிதையின் சில வரிகள் இந்தக் கவிதைத் தரத்தினை மிக உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டன எனப் பாராட்டினார். விழாவுக்கு தலைமையேற்ற கோடை எப்.எம் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், பாலைப் பூக்களின் தரமானக் கவிதைகள் மக்களால் பேசப்படும் கவிதைகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டார். ‘கணவன்’ கவிதை ஆண்கள் மனதில் ஏற்ற வேண்டிய கவிதை எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் மின்தடை பற்றிய குறுங்கவிதையும், பூக்களின் ஊர்வலம் கவிதை உட்படப் பல கவிதைகள் தரமானதும் இலக்கிய வளம் மிக்கதுமாகும் எனக் கூறினார். நன்றியுரை மற்றும் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர், தன்னுடைய கவிதை பிறப்பின் ஊன்றுகோலாக இருந்த காரணிகள், சூழல் பற்றியும், மஸ்கட்டில் இருந்தாலும் தன்னோடு இரண்டறக் கலந்துவிட்ட நாஞ்சில் மண்ணில் சிறப்புதான் கவிதை படைக்க தனக்கு வடிகாலக அமைகிறது அன்பதையும் எடுத்துக் கூறினார். வரவேற்புரையாற்றிய பேரா.அப்துல்சமது அவர்கள் நூலாசிரியரின் சிறப்பையும், நூலின் சிறப்பையும் எடுத்துக் கூறினார். விழாவில் நேஷனல் பப்ளிஷர்ஸ் உரிமையாளர் எஸ்.எஸ். ஷாஜகான், தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கேப்டன்.அமீர்அலி, முஸ்லீம் கலைக் கல்லூரி முதல்வர் முகமது அலி, எழுத்தாளர் ஆர்னிகா நாசர், கவிஞர் ராஜாமுகமது, கொடிக்கால் ஷேக் அப்துல்லா, முன்னாள் முதல்வர். ஹசன், டாக்டர். பத்மனாபன், ஆக்ஸ்ஃபோர்ட்.அலிகான், திரு.சிவராசன், திரு.செந்தீ நடராசன், மங்காவிளை ராஜேந்திரன், மஸகட் அபுல்ஹசன், அப்துல் சலாம், மற்றும் குமரிமாவட்ட பிரபல கவிஞர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், குமரி மாவட்ட மற்றும் சென்னைப் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். http://dinamani.com/edition_thirunelveli/kanyakumari/article1382746.ece

Saturday, November 2, 2013

தீபாவளி வாழ்த்துக்கள் - Diwali Greetings

Dear Friends,
Wish you and all your family members a VERY HAPPY DIWALI.
May this festival of lights light up your life and fill with happiness!
Regards
Basheer & Family

Monday, October 14, 2013

கவிஞர் வாலி...! வாழும் இசையே வாலி !

வாழும் இசையே வாலி !
மு.பஷீர் . மஸ்கட்

வாலிஎனும் இரண்டெழுத்து கவிதைச் சூரியன்
அண்மையில் அஸ்தமித்த செய்திகேட்டு- தமிழ்
அவனியில்  கலங்காத கண்களே இல்லை !
ஐந்து தலைமுறைகளைத் தன் பேனாமையினால் கட்டிப் போட்டவர்.
பதினைந்தாயிரம் பாடல்களை திரையில் தெளித்தவர் !
மறையும் முன்புகூட சமகால  இன்றைய இளைய நடிகர்களுக்காக
இளமைத் ததும்ப இசைப்பாடல்கள் வடித்தவர் ! 
அந்த 82-வயது வாலிபக் கவிஞரின்தமிழ்ப்பணிக்காக மஸ்கட் தமிழ்ச்சங்கம் வாழும் இசையே வாலி அன்றும் இன்றும்என்ற
கரோக்கி மெல்லிசை இரவினைசெப்டம்பர் மாதம் சிறப்பாக நடத்தியது.

அந்த நிகழ்ச்சியின்  நான் வழங்கிய தொகுப்புரையின் சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மெத்த மகிழ்ச்சியடைகிறேன் !

கவிஞர் வாலி, திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், ஓவியர், எழுத்தாளர்,
நடிகர், இயக்குனர் என பன்முக வடிவம் கொண்டவர் வாலி.

திரைப்பட உலகுக்கு அவர் ஆற்றிய பணியைப் பாராட்டினால்
அதற்கு வார்த்தைகள் மிகையாகாது.

தன்னம்பிக்கை மூலம் தரணியை ஆளலாம் என்பதற்கு
தன்னிகரற்ற உதாரணம்.
   
தலைமுறைகள் பல கடந்தும் தமிழ் விருந்து படைத்தளித்த
கவிப்பெரும் காவியக் கவிஞர் வாலி.

வாலி ஒரு வாலிபக் கவிஞர்..
நண்பர்கள் புடைசூழ ஜாலியாகவே இருக்கும்
பண்பட்ட கவிஞர் !

82 வயதிலும் கவிதை வடம்பிடித்த தமிழ்த் தேரோட்டி
அதனால்தான் திரையுலகமே திரண்டு விழாஎடுத்தது
அவரைப் பாராட்டி !
தமிழ்தாயை அவர் அழகுசெய்தார் சீராட்டி
கவிதை, பாடல் வார்த்தை சீர்ஊட்டி !
தமிழ் மணம் பரப்பினார் சந்தண நீரூற்றி !

வர்ணனைகளின் முதலாளி வாலி
வார்த்தைகளைப் படிமமாக்கிப்
பின்அதை வடிவமாக்கி
கறுப்பு வெள்ளைப் படங்களுக்கு
சிறக்கும் வண்ணம் தீட்டியவர்...காரணம்
அவர் ஒரு கவிஞர்... இன்னும் ஓவியர் !

மல்லிகையை மங்கையர் ஆரமாகத் தொடுப்பதுபோல்
வார்த்தைகளை பாடல்களாகச் சரம் தொடுத்தவர்
பாடல்களின் வெற்றிக்கே  உரம் கொடுத்தவர்.

எளிமைக்கு உரித்தானவர்
இதழ் சிரிப்பால் முதுமைக்கே, இளமை சேர்த்தவர் !
கடந்த கால நினைவுகளைச் சுமந்தே வாழ்ந்தவர் வாலி.
82 வயதில் 28 வயது இளமை மனத்துடன் வியக்கும் பாடல் எழுதிய
வாலிபக் கவிஞர்.
வாலியோடு போட்டிபோட்டு
முதுமையடைந்தது
வயதுதானே தவிர
வாலியல்ல !

பாமரனைச் சென்று அடைவதே, சிறந்த இலக்கியம் என்பார் வாலி. அதன்படியே கடைசி வரை தன் பாடல்களை, எழுத்துகளை அமைத்துக்கொண்டார்.
தாய்மீது கவிஞர் கொண்ட அன்பு
தமிழ் உலகுக்கே இவர் சொன்ன பண்பு
தாய் எனும் தலைசிறந்த உறவுமுறையை
தலைமேல் வைத்து எழுதியவர்...
தாயில்லாமல் நானில்லை எனத்
தரணிக்குச் சொன்னவர் நம்மவர். அதைத்
தாரக மந்திரமாய் இசைக்கவும் வைத்தவர் !

ஆண்டவனை நேசித்தபின்
அளவற்று நாம்  நேசிக்கும்
அற்புத உறவுதான் அம்மா எனும் ஜீவ உறவு.

அவரின் அம்மாப் பாடல்கள் கேட்டு
அதிசயப் படாத அன்னையரும் இல்லை...
மனம் கலங்காத மாந்தரும் இல்லை !

அதனால் தானம்மா
அம்மாபற்றிய எண்ணற்ற பாடல்களை
அவர் இயற்றினாரம்மா !
இளமைக் கொஞ்சும்
இன்பம் கெஞ்சும்
காதல் கவிரசம் விஞ்சும்
கற்பனைகள்கூட இவரின்
சொற்புனைவின் திறன்பார்த்து அஞ்சும் !
கவித் திறனுக்கா இவர் பாடலில் பஞ்சம்
கேட்டு என்றென்றும் ரசிக்கட்டுமே நம் நெஞ்சம் !

வாழும் கவிஞராகவே வாலி இன்றும் நம்மோடு வாழ்கிறார்...
என்றும் வாழ்கிறார்.

உடலால் மட்டுமே பிரிந்தாலும் பாட்டால் நம்மோடு நித்தமும்,
பங்காளியாகவே இருக்கிறார் பாட்டுலக மன்னர் வாலி !  நின் புகழ் வாழி !

அன்பன்
மு. பஷீர்










தியாகத் திரு நாள் வாழ்த்துக்கள் !

தியாகத்தின் 
நினைவுகளை
தரணிக்குக் காட்டும் 
சாளரம்;
தியாகத் திரு நாள் !
நெஞ்சம் நிறைந்த தியாகத் திரு நாள் வாழ்த்துக்கள் !

---- மு. பஷீர், மஸ்கட்

Wednesday, August 7, 2013

Eid Mubarak...ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் !


இல்லங்கள் தோறும்

இன்பங்களின் பிரவாகம்

ஈகையின் சிறப்பால்
இசைத்திடும் மனங்கள் பலவாகும்

அகிலம் தழைத்திட அருள்

சகலமும் பெற்றிட  இறையருள் வேண்டி;

இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் !
மு. பஷீர்– மஸ்கட்.

Monday, July 15, 2013

'நினைவில்  நின்றவை' என்ற 'Golden Melodies'  நிகழ்ச்சி மஸ்கட்டில் 14-6-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியைத் தமிழில் தொகுத்து வழங்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. என்னுடைய தொகுப்பில் சில;  

'...60-களில் தொடங்கி தமிழ்த் திரைப்பட இசை,
தனெக்கென ஒரு பாதையை அமைத்து
தனி அத்தியாயத்தையே படைத்தது எனலாம்.
அது இறக்கை  கட்டி ,  நம்மை இன்ப வானில் மிதக்க வைத்தது;
வேதனைப் படுகையில் அமைதியாய்,
வாழ்க்கைப் பாதையில் வழிகாட்டியாய்,
வசந்தம் வீசும் காதல் அன்பாய்,
தத்துவம் பேசும் சித்தாந்தமாய்
நித்தமும் நம்மோடு இரவின் நித்திரைவந்து
சுகம் தரும், சுகமான கீதங்களாய் ...
ஒலித்தன, ஒலிக்கின்றன,
இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
அத்தகைய திரையிசையை ‘Golden Melodies’
என்ற பேர்சூட்டி ‘பொன்னானப் பாடல்களை’த் தேர்ந்தெடுத்து,
பலதரப்பட்ட பாடகர், பாடகியர், இசையமைப்பாளர்கள்,
கவிஞர்கள் ஆகியோரின் சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்து
இங்கே ‘நினைவில் நின்றவை’ எனும் தலைப்பில் உங்கள்

நெஞ்சங்களில் இசைமழை பொழிந்திட வருகிறார்கள்...'

மஸ்கட் தமிழ்த் தோட்டத்து ரோஜா செல்வி. பிரியதர்ஷனி மற்றும் பாடகர்கள் ..
திரு. ரமேஷ் நாராயண், திரு. அன்வரலி, செல்வன். அகிலேஷ்,
திரு. ஸ்ர்பராஸ் திரு.. ஷெஹ்னில் பாடல்களை வழங்கினர்.


ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி பாடலுக்கான என் தொகுப்புரை :

PBS என்று அன்பாய் அழைக்கப்படும் P.B. ஸ்ரீனிவாஸ்
தமிழ்த் திரை வானில் ஒளிர்ந்து வசந்தமாய் வாழ்ந்து,
சமீபத்தில் நம்மைவிட்டு மறைந்த இசை நட்சத்திரம்.
ஆனால் என்றென்றும் மிளிரும் நட்சத்திரம் !

அவர் 
முண்டாசு கட்டிய
முத்தான குரலுக்கு
முதல்வர் !

கறுப்பு வெள்ளைப் படங்களுக்கு
தனது பாடல்களின் இனிமையால்
சிறப்பு வண்ணம் தீட்டிய ஓவியர்- ஆம்
இவர் ஒரு ஓவியர் !

சட்டைப் பைக்குள் எப்போதும்
வண்ணத் தூரிகைகளை சுமப்பவர் !
எண்ணத்துக் கவிதைகளை
எடுத்தெழுத வைத்திருக்கும்
கவிஞர்... ஆம் 
இவர் ஒரு கவிஞர் !
எட்டு மொழிகள் அறிந்த இவர் - கசல்
பாட்டுக்களை தெலுங்கில் எழுதியவர் !

தன் மென்மைக் குரலால் தமிழ்
இதயங்களைக் கட்டிப்போட்ட
பண்பாளார்.. பணிவாளார் !
பிரபல ஹிந்தி நடிகை ரேகாவின் தந்தையான
காதல் மன்னன் ஜெமினிகணேசனுக்காக அதிகப் பாடல்களைப் பாடியவர்.

1962-ஆம் ஆண்டு  வெளியானது வீரத்திருமகன்’ படம்.
கட்டிளம் காளையாக  நடிகர் ஆனந்தன் மற்றும்
இளவரசியாக சச்சு நடிக்க இருவரும் காதல் வசப் படுகிறார்கள்.

காதலுக்குத்தான் கண்ணில்லையே..
காதல் கனிகிறது...
காட்சி அமைகிறது !
பாடல் மலர்கிறது !
‘வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது..’

காதலைக் கூட சமுதாயக் கண்கொண்டு பார்க்கும்
கவியரசரின் வரிகள் !

1962 ஆம் ஆண்டு...
நான் பிறப்பதற்கு முன் பிறந்த பாடல்
நம் அனைவர் நெஞ்சிலும் என்றென்றும்
நிலைத்திருக்கும் பாடல் !

இதோ ... செல்வி.பிரியதர்ஷனி மற்றும்
திரு. செல்வன். அகிலேஷ் அவர்களின் குரல்களில் உங்களுக்காக !

Tuesday, July 9, 2013

ஜெயா டிவியின் ‘காலை மலர்’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பான என்னுடைய நேர்முக நிகழ்ச்சி

நன்றி! நன்றி! இன்றுகாலை ஜெயா டிவியின் ‘காலை மலர்’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பான என்னுடைய நேர்முக நிகழ்ச்சியைக் கண்டு, நிகழ்ச்சியினூடேயே குறுஞ்செய்தி அனுப்பியும், தொலை பேசியில் அழைத்தும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட நண்பர்களுக்கும், தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்!.
இங்கிருந்து விடுமுறையில் சென்ற நண்பர்களும் மற்றும் தமிழகத்தின் என் நண்பர்களும் கூட எங்கிருந்து தங்களின் வாழ்த்டுக்களைப் பரிமாறிக்கொண்டது மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்ததோடு மட்டுமின்றி என் இலக்கியப் பணிதொடர இன்னும் தூண்டுகோலாய் அமையும் என்பதில் நான் நம்பிக்கை பூண்டுள்ளேன் ! அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் பணிவான நன்றியை மீண்டும் சமர்ப்பணம் செய்கிறேன்! அன்புடன்; மு. பஷீர். மஸ்கட்

என்னுடைய நேர்முக நிகழ்ச்சி: ஜெயா டிவியின் 9-7-2013 ‘காலை மலரில் மு. பஷீர். மஸ்கட்

என்னுடைய நேர்முக நிகழ்ச்சி: ஜெயா டிவியின் ‘காலை மலரில் இன்று ஒளிபரப்பானது - நன்றி !  நன்றி! நன்றி!
அன்புடன்; மு. பஷீர். மஸ்கட்

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி

டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி  & டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் மஸ்கட் நிகழ்ச்சி
மஸ்கட்டில் டாக்டர்.திருமதி விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் மற்றும் டாக்டர்.திரு நவநீத கிருஷ்ணன் தம்பதியரின் மண்வாசனையோடு கிராமிய சங்கமம் நாட்டுப்புற பாடல் & நடன நிகழ்ச்சி !

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் மாநாடு- குற்றாலம் செப்:30, அக்:1 & 2

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது

B. H. அப்துல் ஹமீது & பஷீர் முகம்மது
B. H. அப்துல் ஹமீது (பாட்டுக்கு பாட்டு) @ Muscat & பஷீர் முகம்மது

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு

தேவா, L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு
‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் ‘கலைமாமணி’ L.R. ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு. சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் திரு. பஷீர் முகமது அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்புரையாற்றினார்.

பாட்டுக்கு பாட்டு @ Muscat

பாட்டுக்கு பாட்டு @ Muscat
B. H. அப்துல் ஹமீது பாட்டுக்கு பாட்டு @ Muscat & பஷீர் முகம்மது