எண்ணமும் எழுத்தும் !
வள்ளுவம் !
குறள் கூறும் அறம்!
தமிழ்
மொழிக்கும், தமிழன் வாழ்வு நெறிக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும், தமிழ் இலக்கியத்துக்குமாக,
மதம் சாராதா, எல்லா மனித குலத்துக்கும் ஏற்ற ஒரு பொது மறையாக, நீதி நூலாக, எக்காலத்துக்கும்
எல்லா மனிதகுலமும் ஏற்று மகிழும், போற்றி மகிழும், வாழ்வு நெறியாய்க் கொண்டு மகிழும்
ஒரு தமிழ் இலக்கிய நீதிநூல் என்றால் அது ‘திருக்குறள்’ என்று பெருமையுற நாம் சொல்லிக்
கொள்ளலாம்.
அத்தகைய
சிறப்பான திருக்குறளில் ஒரு மையக்கருவாக அமைந்திருப்பது ‘அறம்’ என்பதாகும். ஆகவே ‘குறள்
கூறும் அறம்’ எனும் தலைப்பில் திருக்குறளில் புதைந்து கிடைக்கும் அறனையும், அறன் சார்ந்த நெறிகளையும் பாடப் பொருளாய்க் கொண்டு ‘குறள் கூறும்
அறம்’ என தமிழ்ச்சங்க திருக்குறள் வகுப்பில் பாடமாய் ஆய்ந்தறிந்து விளக்கி வருகிறேன்
வாரம் தோறும்.
‘தொட்டனைத்
தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’
கற்றனைத் தூறும் அறிவு’
எனத்தாங்கி,
ஆழமும் அகலுமாய், தோண்டத்தோண்ட புதையலாய், புதுப்புது வண்ணங்களில், வள்ளுவப் பெருந்தகையின்
குறள் கருத்துக்கள், அள்ள அள்ளக் குறையாது புதுப்புது எண்ணங்களில் ஊற்றாய் பெருக்கெடுத்து
சிறக்கிறது. இது திருக்குறளுக்கேயான சிறப்பென்றால் மிகையாகாது.
குறளின்
சிறப்பே சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் பாங்குதானே!
அதனால்தானே
ஔவையார்,
"அணுவைத்துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத்தறித்தது குறள் "எனக் கூறி திருக்குறளின் சொல் மற்றும் பொருளின் ஆழத்தை பெருமையுடன் எடுத்துக் கூறுகிறார்!.
"அணுவைத்துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத்தறித்தது குறள் "எனக் கூறி திருக்குறளின் சொல் மற்றும் பொருளின் ஆழத்தை பெருமையுடன் எடுத்துக் கூறுகிறார்!.
அத்தகைய சிறப்புமிகு திருக்குறள் வாழ்வின் எல்லா நிலைகளிலும்
மனிதன் வாழ வேண்டிய நெறிகளை இலகுவாகவும், ஆழமாகவும், அதே நேரத்தில் வலியுறுத்தியும்
சிறப்பாகக் கூறிவருகிறது.
மனிதன் மேம்பட்ட மனிதனாக வாழ அறனை
வலியுறுத்துகிறது. அந்த அடிப்படையில், நாமும் அறன் வலியுறுத்தலில் தொடங்கி, அழுக்காறாமை,
ஒழுக்கமுடைமை, அவா அறுத்தல், ஒழுக்கமுடைமை, வெகுளாமை, பொறையுடைமை, கூடா ஒழுக்கம், அன்புடைமையையும்,
அருளுடைமையையும், மெய்யுணர்தல் என்ற வரிசையில் பயணிக்கிறோம்.
வரும் பதிவுகளில் இந்த வரிசையில் எண்ணங்களைப்
பகிர்ந்து கொள்ள விழைகிறேன்!.
No comments:
Post a Comment