அறம் என்பது சமுதாயத்தின் வழிவழியாய்
வருகிற உயர் நிலைப் பண்பெனக் கொண்டோமானால், அது நமது தமிழ்க் கலாச்சாரத்துடன் காவலாய்
என்னாளும் இருந்து வந்திருக்கிறதென்பது என்ற உண்மையையும் நாம் அறியவேண்டும்.
அது காலத்துக்குக் காலம் தன்னை மெருகேற்றிக்
கொண்டிருந்தது என்பது கண்கூடான உண்மை.
தமிழர்களின் சிறந்த பண்பாட்டுமுறைகள்
தனிமனித, சமுதாய முன்னேற்றத்துக்கான காரணிகளாகப் பயன்பட்டு வந்திருக்கின்றன. ஆனால்
இவையெல்லாம் காலம் சார்ந்த ஒன்றாகவே பெரும்பாலும் இருந்துள்ளன. ஆகவே அறம் என்பதுகூட
காலம் சார்ந்த ஒன்றாகவே இருந்துவந்துள்ளது.
பரத்தமை ஒழுக்கம், கள்ளுண்ணுதல் போன்றவை
சங்க இலக்கியங்களில் கடிந்து பேசப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைந்ததைக் காணும்போது,
வள்ளுவப் பெருந்தகை அதனை ஆணித்தரமாக அவற்றை கைவிடச்சொல்லும் முறைகள் அறத்தின் காலம்
சார்ந்த மெருகேற்றத்தை நமக்கு உணர்த்துகிறது.
'பிறன் மனை நோக்காத பேராண்மை' என்று
சொல்லி ஆணுக்கான அறவொழுக்கத்தை நிர்ணயித்தார். தனது மனைவியை விடுத்துப் பிற பெண்களுடனான
தொடர்பினை, பரத்தையர் தொடர்பினை ஒழுக்கமற்ற செயலாகக் கண்டித்தார் வள்ளுவர்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. – குறள் 34
ஆகுல நீர பிற. – குறள் 34
ஒருவன் தன் மனத்தில் குற்றமற்றவனாக
இருக்க வேண்டும். அறம் என்பது அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவையெல்லாம் ஆரவாரத் தன்மை
உடையவை என்பார் மு.வ.
உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருந்து,
ஆர்ப்பாட்டம் இன்றி, அறம் செய்து வந்தாலே போதும். மனம் சார்ந்து பிறப்பதுதான் அறம்.
ஆகவே மனம் சுத்தமானதாக இருந்துவிட்டால் செய்யும் செயல்களெல்லாம் அறமாகவே அமையும்.
ஆம் உள்ளத்தில் குற்றம் இல்லாது இருத்தலே
அறமாம்.
வள்ளுவர் கூறும் அறன் வலியுறுத்தலின்
தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.
மனிதனின் அனைத்து செயல்களும் பிறப்பது எண்ணங்கள் மூலம்தானே.
எண்ணம்தானே எல்லாக் காரியங்களுக்கும் ஊற்றாய் அமைகிறது.
ஆகவேதான் அத்தகைய எண்ணத்தை, மனத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால்
அதன்மூலம் எல்லாக் கட்டுப்பாடுகளும் அதனுள் அடங்கிவிடுமல்லவா..!
இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை
மனத்துக்கண் மாசிலன்
ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. – குறள்-34
ஆகுல நீர பிற. – குறள்-34
ஒருவன் தன் மனத்தில் குற்றமற்றவனாக இருக்க
வேண்டும். அறம் என்பது அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவையெல்லாம் ஆரவாரத் தன்மை உடையவை
( மு.வ உரை).
அதாவது மனதை மாசற்றதாக ஆக்கிக்கொள் என அறிவுரை தருகிறார் நமக்கு. மனம்
மாசற்றதாக ஆகிவிடும்போது எல்லாமும் நன்மையாகிவிடுகிறது.
வள்ளுவர் சொன்ன இதேக் கருத்தை உள்ளடக்கித்தான்;
'சினமடக்கக் கற்றாலும்
சித்தியெலாம் பெற்றாலும்
மனமடக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே!’
மனமடக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே!’
எனத் தாயுமானவரும் கேட்கிறார்.
ஆனால் மனம் களங்கப்பட்டதாக இருக்கும்போது அது இழிவான செயல்களையே செய்ய
நம்மை முற்படுத்தும். மனம் சுத்தமாகாமல் உடலும்,
உடையும் சுத்தமாகச் சென்று, மனதுக்குள் கெட்டவற்றை எண்ணி இறைவனை வழிபட்டால், நம்முடைய
பிரார்த்த்னைகளை இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பதே உண்மை.
No comments:
Post a Comment